பக்கம்:கற்பக மலர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பக மலர்

அமுதம், கற்பகம், காமதேனு, சிந்தாமணி ஆகிய வற்றை நாம் நேரில் அறியர்விட்டாலும் நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடி அவை அடிபடு கின்றன. மிகவும் சுவையுள்ளதாக இருந்தால், 'அமுதம் போல இருக்கிறது” என்று சொல்லுகிருேம். அமுதத்தைப் பற்றின கதை நமக்குத் தெரியுமேயன்றி அதை யாரும் கண்டதும் இல்லை; சுவைத்துப் ப்ார்த்ததும் இல்லை. பூமத்திய ரேகை அல்லது நில நடுக்கோடு என்ற ஒன்றைப் பூகோள நூலில் அடிக்கடி படிக்கிருேம். நாடுகளின் வெப்பதட்ப நிலைகளையும் அவற்றின் அமைப்புக்களையும் தெரிந்து கொள்வதற்கு அந்த நடுக்கோட்டை வைத்துக் கணக்குப் போடுகிருேம். ஒருவன் அதை நேரிலே போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று, கணக்கையெல்லாம் வைத்துக்கொண்டு புறப்படுகிருன். அவன் அதைக் காண முடியுமா? நிச்சயமாக முடியாது. தொலேயாடி, நுண்ணுடி என்ற விஞ்ஞான விசித்திரப் படைப்புக்களாகிய கண்ணுடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/10&oldid=553220" இலிருந்து மீள்விக்கப்பட்டது