பக்கம்:கற்பக மலர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கற்பக மலர்

பிறவியென்னும் கடலில் அழுத்தினவாகிய உயிர்கள் முத்தியென்னும் கரையைச் சேரவேண்டும். கடலேக் கடப்பதற்கு உரிய கருவிகள் தெப்பம், ஒடம், தோணி, கப்பல் முதலியன. இறைவனுடைய திருவருள் தெப்பம் முதலியவற்றைப் போலப் பிறவிக் கடலைக் கடக்கப் பயன்படும்.

'புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே’’ என்பது திருவாய்மொழி. அடியார்பால், இணேயில் பவங்கிளர் கடல்கள் இகந்திட இருதாளின் புனேயருள் அங்கணர்’ என்பது பெரிய புராணம். -

கடலில் உள்ள தெப்பத்தைப் பற்றிக்கொள்ளாதவர் கடலுக்குள்ளே ஆழ்ந்து போவார்கள். சேராதார் நீந்தார்’ என்பதற்கு, அதனைச் சேராதார் நீந்த மாட்டாராய் அதனுள் அழுந்துவர் என்று பரிமேலழகர் உரை எழுதினர்.

ஆகவே, பிறவிக் கடலாக உருவகம் செய்ததற்கு ஏற்ப வீடுபேற்றைக் கரையாகவும், இறைவன் திருவடியைப் புனேயாகவும் கொள்ள வேண்டும். உயிர்க் கூட்டங்களில் புணேயைப் பற்ருமல் ஆழ்கிறவர்கள் ஒரு வகை; புனையின் உதவியால் கரைசேர்ந்தார் ஒரு வகை. புணே அல்லது கப்பலிலே ஏறிக்கொண்டவர்கள் நிச்சயமாகக் கரையை அடைவார்கள். அவர்களுக்குக் கடலில் இருக்கும் போதும் அச்சம் தோன்ருது. நல்ல கப்பலில் ஏறிக்கொண்ட வருக்குக் கப்பற்பயணம் மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருக்கும்.

இறைவன் திருவடியை இறுகப் பற்றியவர்கள் இந்த உலகில் வாழ்ந்தாலும் அச்சமின்றி வாழ்வார்கள்; துன்ப மின்றி இன்பத்தை நுகர்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/101&oldid=553315" இலிருந்து மீள்விக்கப்பட்டது