பக்கம்:கற்பக மலர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப் பெருங்கடல் 93

"நாமார்க்கும் குடியல்லோம், நமனே அஞ்சோம்:

நரகத்தில் இடர்ப்படோம்; நடலே இல்லோம்;

ஏமாப்போம் பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;

இன்பமே எங்காளும்; துன்பம் இல்லே.

தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மை யான

சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே பாம்என்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச்சே வடியினேயே குறுகி ைேமே”

என்னும் அப்பர் சுவாமிகள் திருவாக்கினுல் இந்த உண்மை தெளிவாகப் புலனுகிறது. பற்றற்றவணுகிய, தான் ஆர்க்கும் குடியல்லாத நிலையுள்ள, இறைவனுடைய திருவடியிணேயைப் பற்றிக்கொண்டவர் அவர். அதனல் இந்தப் பிறவிலேயே நமனே அஞ்சா நிலையும், நடலே இல்லா நிலையும் பெற்ருர். பிறவிக் கடலில் ஆழ்கிறவர் களுக்குத் துன்பமயமாய்த் தோன்றும் வாழ்க்கை அவ ருக்குத் துன்பம் இல்லாத இன்ப வாழ்வாக அமைந்தது. இப்பிறவி நீங்கியபின் வீடு பேறு கிடைப்பது உறுதி. அதனுேடு இப்பிறவியிலேயே துன்பமும் அச்சமும் இல்லாத இன்பமும் கிடைக்கும்.

ஆதலின் இறைவனடி சேர்வதனல் எப்போதோ பயன் உண்டு என்று எண்ணக்கூடாது. செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் ஆல்ை, இப்போதைக்கு என்ன பயன்?’ என்று கேட்டால், 'இப்போதே துன்பத்தில் ஆழாமல் வாழலாம்' என்று உறுதியாகச் சொல்லலாம். இறைவனடியை எந்தக் கணத்தில் பற்றிக்கொண்டாலும் அதுமுதல் அவனிடம் துன்பத்தில் ஆழும் செயல் கின்று விடுகிறது. கப்பலில் தடுமாருமல் தக்க இடத்தைத் தேடிக்கொண்டு அமர்ந்தவனுக்குக் கடலின் அலேயாலோ, சுருமீனுலோ, ஆழத்தாலோ துன்பம் உண்டாகாது. இறைவன் திருவடிப்பற்றை உறுதியாகக் கொண்டவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/102&oldid=553316" இலிருந்து மீள்விக்கப்பட்டது