பக்கம்:கற்பக மலர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம்

கடவுளேத் தெய்வம் என்ற சொல்லால் குறித்தல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது. சொல்லதி' காரத்திலும் பொருளதிகாரத்திலும் தெய்வம் என்ற சொல்லே ஆளுகிருர் தொல்காப்பியர். திருவள்ளுவர் அச் சொல்லேப் பல இடங்களில் எடுத்து ஆள்கிரு.ர். கடவுள் என்ற சொல்லைத் தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் பல இடங்களிற் காணலாம். திருக்குறளிலோ கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பில் மட்டும் அச் சொல் காணப்படுகிறதேயன்றி, நூலுக்குள் ஒரிடத்திலும் வரவில்லை.

தெய்வம் என்ற சொல் முழு முதற் கடவுளேக் குறிக்கவும் வரும்; தேவர்களேக் குறிக்கவும் வரும். இந்த இரண்டு வகையிலும் திருவள்ளுவர் அச் சொல்லே வழங்குகிருர்.

இன்ப துன்பம் என்னும் இரண்டும் முறையே முன் செய்த கல்வினை தீவினைகளின் பயனக உயிர்களுக்கு வருவன. முன்னே வினையை ஊழ், வினே, விதி, நியதி, பால் என்று பல சொற்களால் சொல்வதுண்டு. திரு வள்ளுவர் ஊழ் என்று தனியே ஒர் அதிகாரமே அமைத் திருக்கிருர். ஊழ் சடமாதலின் அது தானே பயனைத் தராது. ஆதலின் ஊழ்வினேக்கு ஏற்றபடி பயனை ஊட்டும் ஒரு பொருள் இருக்க வேண்டும். அப்பொருளே பரம் பொருளாகிய கடவுள். ஊழின்படியே நுகர்ச்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/104&oldid=553318" இலிருந்து மீள்விக்கப்பட்டது