பக்கம்:கற்பக மலர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母份 கற்பக மலர்

வரையறை செய்வதல்ை கடவுளேப் பால் வரை தெய்வம் என்று குறிப்பதுண்டு.

'பால்வரை தெய்வம் வினேயே பூதம்

ஞாயிறு திங்கள்’ (கிளவியாக்கம், 57)

என்ற தொல்காப்பியச் சூத்திரம் வினையைத் தனியாகவும், பாலாகிய அதனே வரையறை செய்யும் தெய்வத்தை வேருகவும் வைத்துப் பேசுகிறது. -

திருவள்ளுவர் பால்வரை தெய்வத்தைத் தெய்வம் என்ற பெயரால் இரண்டு இடங்களில் குறிக்கிருர்.

தெய்வத்தான் ஆக தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619)

என்பது ஒன்று. ஆள் வினையுடைமையாகிய முயற்சியின் பெருமையைச் சொல்லும் குறள் இது. ஊழ் மிக வலிது. அதன்படியே யாதும் நிகழும். ஆயினும் முயற்சிக்கும் ஒரளவு பயன் உண்டு என்பதைச் சொல்ல வரும் குறள் இது. பால்வரை தெய்வத்தால் கருதிய பயன் ஆகா விட்டாலும், முயற்சி உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியைத் தரும் என்பது இதன் பொருள். முயன்ற வினே, பால்வகையால் கருதிய பயனேத் தராது ஆயினும், முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியளவு தரும்; பாம் ஆகாது’ என்று பரிமேலழகர் உரை எழுதுகிருர். தெய்வம் என்பதற்குப் பால்வகை யென்று உரை கூறினும் பால்வரை தெய்வத்தையே அது குறித்ததாகக் கொள்ள வேண்டும்.

வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடி - தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/105&oldid=553319" இலிருந்து மீள்விக்கப்பட்டது