பக்கம்:கற்பக மலர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் 9ኛ

என்னும் குறள் ஊழ் என்னும் அதிகாரத்தில் வரும் இறுதிப் பாட்டு. ஐம்பொறிகளாலும் நுகர்வதற்குரிய பொருள்கள் கோடி சேர்த்து வைத்தவருக்கும் ஊழ் வினேயின்படி நுகர்ச்சி கைகூடுமேயன்றி, அவ்வளவையும் நுகர்தல் அரிதாகும்' என்பது பொருள். இங்கே ஊழ் வினேயை, 'வகுத்தான் வகுத்த வகை’ என்று தெளி வாகச் சொல்கிருர் திருவள்ளுவர். வகுத்தான் ஒருவன் உண்டு; அவன் வகுத்த வகை ஒன்று உண்டு. வகை என்பது பாலாகிய ஊழ். அதை வகுத்தான் பால்வரை தெய்வம் என்று தொல்காப்பியம் கூறும் கடவுள்,

ஆகவே, ‘தெய்வத்தான் ஆகா தெனினும்' என்ற குறளில் வரும் தெய்வம் என்பது பால்வரை தெய் வத்தையே குறிப்பதாகக் கொள்வதுதான் பொருத்தமாகும். "இதை நான் எழுதினேன்' என்றும், இது என் கை எழுதியது” என்றும் கருத்தாவுக்கும் கருவிக்கும் உள்ள ஒற்றுமை பற்றிக் கூறுவதுபோல, பால்வரை தெய்வத்தின் செயலேயே பாலின்மேல் ஏற்றிக் கூறுவது உபசார வழக்கு.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் (1023)

என்பதிலும் தெய்வம் வருகிறது. குடிசெயல் வகை என்னும் அதிகாரத்தில் உள்ளது இக் குறள். என் குடியின உயரச் செய்வேன் என்று கொண்டு, ஏற்ற வகையில் முயற்சி செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு உதவி செய்ய முன் வரும் என்பது இதன் பொருள். * . .

இங்கும் தெய்வம் என்பது பால்வரை தெய்வம் என்ற கருத்தில் வந்ததே. முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது” என்பது பரிமேலழகர் உரை. கியதியாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/106&oldid=553320" இலிருந்து மீள்விக்கப்பட்டது