பக்கம்:கற்பக மலர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$9.8 கற்பக மலர்

பாலேத் தெய்வமாகக் குறித்தார் திருவள்ளுவர் என்னும் பொருள்பட உரை எழுதினர் அவர். முன் சொன்ன ஒற்றுமை நயத்தின்படி கியதி என்றது பால்வரை தெய் வத்தை என்றே கொள்ளவேண்டும்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (55)

என்பது பலரும் பலமுறை கூறும் குறள்.

'தன் கொழுநனேயே தெய்வமென்று கருதிப் பிற தெய்வத்தைத் தொழாத கற்புடையவள், பெய்யென்று சொன்ன அளவிலே மழை பெய்யும் என்பது இதன் பொருள். -

தெய்வத்தைத் தொழுவது யாவருக்கும் கடமை யாயினும் கற்புடை மகளிருக்கு அது வேண்டுவதன்று என்ற கருத்தை இது கூறுகிறது. பிற நூல்களும் இந்தக் கருத்தை வற்புறுத்துகின்றன. -

இங்கே, தெய்வம் தொழுவதற்குரியது என்ற கருத்தும் இருக்கிறது. பரிதியார் என்ற உரையாசிரியர் ‘குலதேவதை' என்று பொருள் கூறுவார். தெய்வத் துக்குப் பல உருவங்களும் நாமங்களும் உண்டு. அதனல் பல தெய்வங்கள் என்று சொல்லும் வழக்கு உண்டாயிற்று. வழிவழியே குலத்தினர் வழிபடத் தாமும் வழிபட்டு வரும் கடவுளே, வழிபடு தெய்வம்’ என்று குறிப்பது ஒரு மரபு.

வழிபடு தெய்வம் கண்கண் டாஅங்கு” -

என்று நற்றிணையில் வருகிறது.

'வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப’’ என்பது தொல்காப்பியம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/107&oldid=553321" இலிருந்து மீள்விக்கப்பட்டது