பக்கம்:கற்பக மலர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் 9 9

பால்வரை தெய்வம் என்று குறிப்பதுபோல, வழிபடு தெய்வம் என்று குறிப்பதும் மரபு. தெய்வம் தொழாஅள்’ என்பதல்ை ஏனேயோர் வழிபடு தெய்வத்தைத் தொழும் வழக்கம் உள்ளவர் என்பதும், கற்புடை மகளிர் கணவரையே வழிபடு தெய்வமாகக் கொள்வர் என்பதும் புலகிைன்றன. .

ஆகவே, தெய்வம் என்பதற்குப் பால்வரை தெய்வம், வழிபடு தெய்வம் என்று பொருள் விரிக்கும் படி திருவள்ளுவர் ஆள்கிருர் என்பதைக் கண்டோம். ஒரு தொடர் கடவுளின் செயலேயும், மற்றென்று அவர் மாட்டுப் பிறர் செய்யும் செயலையும் குறித்து கிற்கின்றன.

திருக்குறளில் தெய்வம் என்ற சொல்லைத் தேவர்கள் என்ற பொருளிலும் திருவள்ளுவர் அமைக்கிறர்.

தென்புலத்தார் தெய்வம் . விருந்தொக்கல் தான் என்ருங் கைம்புலத்தா ருேம்பல் தலை (43)

என்னும் குறளில் தெய்வம் என்ற சொல் வருகிறது. இங்கே தனிப்பெருந் தெய்வமாகிய கடவுளே அது குறிப்பதாகவும் கொள்ளலாம்; தேவர்களேக் குறிப்பு தாகவும் கொள்ளலாம். பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல் வாழ் வானுக்குச் சிறப்புடைய அறமாம் என்பது பரிமேலழகர் உரை. அவர் தெய்வம் என்பதற்குத் தேவர் என்று உரை கொண்டார். அதற்கேற்ப விசேட உரையில், தெய்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/108&oldid=553323" இலிருந்து மீள்விக்கப்பட்டது