பக்கம்:கற்பக மலர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 கற்பக மலர்

என்பது சாதி யொருமை என்று இலக்கணம் எழுதினர். ஐவர் திறத்தும் ஆற்றும் அறத்தைப் பஞ்ச யக்ஞம் என்பர் வடநூலார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (50)

என்னும் குறளில் தெய்வம் என்ற சொல்லைத் தெளி வாகத் தேவர் என்ற பொருளிலே திருவள்ளுவர் அமைத்தார். வான் உறையும் என்ற அடையும், தெய்வத்துள் என்பதில் உள்ள பன்மைக் குறிப்பும் அந்தப் பொருளைத் தெளிவாக்குகின்றன. வானுல கத்தில் உறையும் தேவர்களுக்குள் ஒருவனுக வைக்கப் படுவான்’ என்று பொருள் விரிக்கும்போது இது பின்னும் தெளிவாகிறது. -

சிறந்தவனேத் தேவரைப்போல மதிப்பது வழக்காத லின் வாழ்வாங்கு வாழ்பவனைத் தேவருள் ஒருவகை எண்ணும் கிலே அமைந்தது. இவ்வாறே வேறு ஒருவனும் தேவருக்குள் ஒருவகை மதிக்கப்பெறுவான் என்ற கருத்தை வேறு ஒரு குறளில் கூறுகிருர்.

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

என்பது அக் குறள். குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் வருவது அது. பிறர் மனத்தில் நிகழ்வதை ஐயப்படாமல் உறுதியாக உணரும் ஆற்றல் பெற்றவனே, மனிதனே யானுலும் தேவர்களோடு ஒப்ப மதிக்க வேண்டும் என்பது இதன் பொருள். இங்கும் தெய்வம் என்ற சொல் தேவரைக் குறித்து கின்றது. இவ்வாறு வரும் இடங்களி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/109&oldid=553324" இலிருந்து மீள்விக்கப்பட்டது