பக்கம்:கற்பக மலர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ வகை

திருவள்ளுவர் பொதுவாகத் தெய்வம் என்று குறிக்கும் இடங்களைப் பற்றி முன் கட்டுரையில் ஆராய்ந் தோம். அந்தச் சொல்லால் முழுமுதற் கடவுளேக் குறிப் பதும், தேவர்களேக் குறிப்பதும் உண்டென்பதை அறிந் தோம். -

இப்போது, குறிப்பிட்ட சில தெய்வங்களேப் பற்றி அவர் கூறும் செய்திகளேக் கவனிப்போம்.

திருமாலே இரண்டிடங்களில் குறிக்கிருர் திருவள்ளுவர். அடியளந்தான், தாமரைக் கண்ணுன் என்று இரண்டு தொடர்களால் சுட்டுகிருர் அப்புலவர் பெருமான்.

மடியிலா மன்னவன் எய்தும், அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு - (610) என்பது ஒரு குறள். தன் அடியாலே எல்லா உலகையும் அளந்த இறைவன் எவற்றை அளந்தானே அவை அனைத்தையும் சோம்பல் இல்லாமல் முயற்சி செய்யும் அரசன் அடைவான்’ என்பது இதன் பொருள்.

இங்கே திருமாலேச் சுட்டியது போலவே திருஞான சம்பந்தப் பெருமானும் திருத்துங்கானே மாடத்துத் திருப்பதிகத்தில், -

'மலர்மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும்

தாய அடியளந்தான் காண மாட்டாத் - த&லவர்க் கிடம்போலும்’ - (9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/111&oldid=553326" இலிருந்து மீள்விக்கப்பட்டது