பக்கம்:கற்பக மலர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ வகை 108

என்னும் பாசுரத்தில் 'தாய அடியளந்தான் என்று கூறுகிருர். இந்தக் குறளில் திருமால் திரிவிக்கிர மாவதாரம் எடுத்து உலகை அளந்த செய்தி வருகிறது.

தாம்வீழ்வார் மென்ருேள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்னன் உலகு (1103)

என்பது திருமாலேக் கூறும் மற்ருெரு குறள். இது காமத்துப்பாலில் வருகிறது. தலைவியோடு இன்புற்ற தலைவன் தான் பெற்ற இன்பத்தை எண்ணிக் கூறும் கூற்ருக அமைந்தது இது. தாம் விரும்பும் மகளிரது மெல்லிய தோளில் துயின்று பெறும் இன்பத்தினும் திருமாலின் உலகத்தில் பெறும் இன்பம் இனியதோ? என்பது இதன் பொருள். ஜம்புலன்களையும் நுகர் வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் ம்ெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல் வருந்தாமல் எய்தலாமோ, அவற் றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம் என்று பரிமேலழகர் உரை விரித்தார்.

இங்கே திருமாலேத் தாமரைக் கண்ணுன் என்று கூறி, அவனுறையும் உலகம் பேரின்பம் தருவதென்ப தைக் குறிப்பாற் பெற வைத்தார். தாமரைக் கண்ணுன் என்பதற்கு மணக்குடவர் இந்திரனென்றும், காளிங்கர் பிரமன் என்றும் பொருளுரைத்தனர். இந்திரனத் தாமரை போன்ற கண்ணுன் என்று சொல்வது மரபன்று; இந்திரனுலகு என்று உரைப்பாரும் உளர்; தாமரைக் கண்ணன் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மை யறிக’ என்று பரிமேலழகர் அதை மறுத்தார். தாமரைக்கண்ணன் என்பதில் உள்ள கண் என்பதற்கு இடம் என்று பொருள் கொண்டு, தாமரையாகிய இடத்தில் உள்ளவன் என்பதல்ை பிரமனேக் குறிப்பதாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/112&oldid=553327" இலிருந்து மீள்விக்கப்பட்டது