பக்கம்:கற்பக மலர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கற்பக மலர்

கூறினர் காளிங்கர். இன்பம் தருவது பிரமனுலகு என்று சொல்வது பெரு வழக்கு அன்ருதலின் அந்த உரையும் பொருந்தாது. திருமாலேப் புண்டரீகாட்சன் என்றும் கமலக் கண்ணன் என்றும் கூறுவது மரபு. அதனை ஒட்டியே தாமரைக் கண்ணுன் என்ருர் திருவள்ளுவர்.

திருமாலின் தேவியாகிய திருமகள் செல்வத்துக்குத் தெய்வமென்றும், அந்தப் பிராட்டியின் திருவருளால் பொருள்வளம் உண்டாகும் என்றும் கூறுவது இந்நாட்டு tDffl { • திருக்குறளாசிரியரும் செல்வம் உண்டாகும் என்று சொல்ல வரும் சில இடங்களில் திருமகள் வருவாள் என்று சொல்கிரு.ர்.

விருந்து ஓம்பி இல்வாழ்க்கையை நடத்துகிறவ ரிடத்திலும், பிறர் பொருளே வெஃகாதவரிடத்திலும், சோம்பலின்றி முயற்சி செய்பவரிடத்திலும் திருமகள் சே வாள் என்கிரு.ர். • , -

முகம் விரும்பி கல்விருந்தினரைப் பேணுபவருடைய வீட்டில் மனம் குளிர்ந்து திருமகள் தங்குவாளாம்.

அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல். - (84)

அறம் இன்னதென்று அறிந்து, பிறர் பொருளே விரும்பாமல் இருப்பவர்களே, எவ்வாறு அடைய வேண்டுமோ அந்த வகையை அறிந்து திருமகள் அடைவாளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/113&oldid=553328" இலிருந்து மீள்விக்கப்பட்டது