பக்கம்:கற்பக மலர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10в. - கற்பக மலர்

உண்டு. பொருமைக்காரனிடமிருந்து திருமகள் நீங்க, அங்கே அவளுடைய தமக்கை வந்து குடி. புகுவாளாம்.

அவ்வித் தழுக்கா றுடையானச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். (167)

அழுக்காறுடையவனேத் தன் தமக்கைக்குக் காட்டி, 'நீ இவனிடமே இரு' என்று சொல்லிவிட்டுத் திருமகள் நீங்குவாள் என்று நயமாகச் சொல்லுகிரு.ர்.

சோம்பல் உள்ளவனிடம் முகடி ഉ.ജി)i-്. சோம்பல் இல்லாமல் முயற்சி செய்பவனிடம் திருமகள் தங்குவாளாம்.

மடிஉளாள் மாமுகடி என்ப; மடிஇலான் தாள்உளாள் தாமரையி னுள். - (617)

‘கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; திருமகள் மடியிலானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவார் அறிந்தோர்’ என்பது பரிமேலழகர் உரிை. .

சூதென்னும் முகடியால் மூடப்பட்டார் (936)

என்று தனியே மூதேவியைக் குறிக்கும் குறள் ஒன்று உண்டு. அங்கே சூதை முகடியாக உருவகித்தார்.

மேலே சொன்ன குறட்பாக்களால் திருமகள் செங்கிற முடையவளென்பதும், தாமரை மலரில் உறைபவ ளென்பதும், செல்வத்துக்குத் தலைவி என்பதும் பெறப் பட்டன. தவ்வையாகிய மூதேவி கரிய நிறமுடையவ ளென்பதையும், திருமகளுக்கு மூத்தவளென்பதையும் உணர்கிருேம். செய்யவள், செய்யாள், தாமரையினள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/115&oldid=553330" இலிருந்து மீள்விக்கப்பட்டது