பக்கம்:கற்பக மலர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ வகை { 0 Y

திரு என்ற பெயர்கள் திருமகளுக்கு வழங்கும் என்பதையும் அறிந்துகொள்கிருேம்.

உலகத்தைப் படைப்பவனேப் பிரமன் என்று புராணங்கள் கூறும். படைப்பு, காப்பு, அழிப்பு என்ற மூன்று தொழில்களில் முதலாவது படைப்பு. பிரமனே எல்லாருடைய தலையிலும் எழுதி விதிக்கின்ருன் என்று கூறுவார்கள்; அதனுல் விதி என்ற பெயரும் அவனுக்கு வழங்கும். இந்த இரண்டையும் இணைத்து ஒரு குறளில் பிரமனே கினேக்கிருர் திருவள்ளுவர்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். (1063)

‘உலகைப் படைத்தவனகிய பிரமன், ஒருவன் இரந்து அதனுல் உயிர் வாழ்வதை விரும்பி விதித்தானுல்ை, அந்தப் பிரமனும் எங்கும் திரிந்து கெட்டுப் போவானுக!' என்று பிரமனேச் சபிக்கிருர் வள்ளுவர். இங்கே விதித்தலேயும் உலகை இயற்று தலையும் அவனுடைய செயல்களாகக் குறிப்பித்தலேக் காண்க. . .

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377) என்ற குறளில் வரும் வகுத்தான் என்பது பால்வரை

தெய்வத்தைக் குறிப்பதாகக் கொள்ளாமல், பிரமனேச் சுட்டியதாகக் கொள்வதும் பொருந்தும். -

பிறவிக்குக் காரணமாக இருப்பவன் பிரமன் என்றுள்ள மரபைப் போலவே, இறப்புக்கு ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/116&oldid=553331" இலிருந்து மீள்விக்கப்பட்டது