பக்கம்:கற்பக மலர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கற்பக மலர்

காரணமாக இருக்கிருன் என்பதும் ஒரு மரபு. அவனேக் கூற்று என்றும் கூற்றம் என்றும் திருவள்ளுவர் சொல்கிரு.ர். உடம்பினின்றும் உயிரைக் கூறுபடுத்துவதனுல் கூற்று என்ற பெயர் வந்தது. - -

தவம் புரிபவர்கள் கூற்றுவனையும் வெல்லும் ஆற்றலைப் பெறுவார்கள் என்பதைப் பல பெரியார்கள் கூறியிருக் கிருர்கள். இந்தக் கருத்தை,

கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்

ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு (269) என்ற குறளில் கூறுகிருர். இதற்கு, தவத்தான் வரும் ஆற்றலேத் தலைப்பட்டார்க்குக் கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்’ என்று பரிமேலழகர் உரை கூறினர். மணக்குடவர், குதித்தல்-தப்புதல். இது மார்க்கண்டேயன் தப்பிற்ை போல என்றது என்று எழுதினர்.

கொல்லாமையை விரதமாகக் கொண்டவனுக்கு வாழ்நாள் இடையே கூற்றுவனது துன்பம் வராது என்று ஒரு குறளில் குறிப்பித்தார்.

கொல்லாமை மேற்கொண்

டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. - (326)

முழு ஆயுளும் வாழ்வார் என்பது இதன் கருத்து. பரிமேலழகர் இந்தக் கருத்தைப் பின்வருமாறு விளக்குவார்: மிகப் பெரிய அறம் செய்தாரும் மிகப் பெரிய பாவம் செய்தாரும் முறையானன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அநுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப்பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்; படாளுகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/117&oldid=553333" இலிருந்து மீள்விக்கப்பட்டது