பக்கம்:கற்பக மலர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ வகை í G 9

எய்தும் என்பார், வாழ்நாள் மேற் கூற்றுச் செல்லாது என்ருர். செல்லாதாகவே காலம் நீட்டிக்கும்; நீட்டித் தால் ஞானம் பிறந்து உயிர் வீடுபெறும் என்பது கருத்து.'

கூற்றம் இறப்பைத் தரும் என்பதை, கூற்றத்தைக் கையால் விளித்தற்ருல் ஆற்றுவார்க் காற்ருதார் இன்ன செயல் (894) என்பதிலும் குறிப்பித்தார்.

கூற்றம் மாற்ற முடியாத பெருவலிமையுடையது என்பதை, மாற்ருருங் கூற்றம்’ என்று தொல்காப்பியர் குறிப்பதனுல் உணரலாம். திருவள்ளுவர்,

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் - ஆற்ற லதுவே படை (765) என்ற குறளில் குறிப்பாக அதைப் புலப்படுத்தினர்.

உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) பண்டறியேன் கூற்றென் r

பதன; இனியறிந்தேன் (1083) என்பவற்றில் உருவக வகையிலும், -

கூற்றமோ கண்ணுே பிணையோ (1085)

என்பதில் உவமையாகவும் கூற்றத்தைச் சொல்கிரு.ர்.

இதுவரையில் கூறியவற்ருல் முழுமுதற் கடவுளே அவருக்குரிய பண்புகளால் கடவுள் வாழ்த்தில் எடுத்துரைத்து, பிற இடங்களில் தெய்வம் என்றும் அவரைக் கூறிய திருவள்ளுவர் திருமால், திருமகள், முகடி, பிரமன், கூற்றுவன் ஆகிய தெய்வ வகை களேப் பற்றியும் கூறியிருக்கிருர் என்பதை அறிந்தோம். அவர் கூறும் மற்றத் தேவர்களைப் பற்றி அடுத்தபடி பார்ப்போம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/118&oldid=553334" இலிருந்து மீள்விக்கப்பட்டது