பக்கம்:கற்பக மலர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரன் முதலியோர்

- தேவர்கள் வாழும் உலகம் வானுலகம். அவர் களுக்குத் தலைவன் இந்திரன். இந்திரன் துய்க்கும் இன்பம் மிகப் பெரியது. இந்திர போகம், இந்திர திருவம் என்று வழங்குவதிலிருந்து so. 6); gp1601–tti வாழ்க்கையின் சிறப்பை உணரலாம். அவனேத் திரு வள்ளுவர் இரண்டு இடங்களில் குறிக்கிருர். நீத்தார் பெருமையைச் சொல்ல வந்த அவர், வானுளோருக்குத் தலைவனும் பேராற்றலுடையவனுமான இந்திரனே தவ முடையோரின் முன் தோல்வியுறுவான் என்று சொல்லுகிருர், - -

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி. - (25)

'புலன்களில் செல்கின்ற அவா. ஐந்தினையும் அடக்கினனது வலிக்கு, அகன்ற வானத்து உள்ளார் இறைவனகிய இந்திரனே அமையும் சான்று’ என்று பரிமேலழகர் உரை கூறி, தான் ஐந்து அவியாது சாபம் எய்தி கின்று, அவித்தானது ஆற்றல் உணர்த்தினைதலின், இந்திரனே சாலும் கரி என்ருர்’ என்று விளக்கினர். அகலிகையை விரும்பிக் கோதம முனிவரால் சாபம் பெற்ற வரலாற்றை தினந்தே இந்த விளக்கத்தைப் பரிமேலழகர் எழுதினரென்று தோற்று கிறது. - இந்திரைேடு தொடர்புடைய புராணக் கதையையே. திருவள்ளுவர் உளம் கொண்டு இந்தக் குறளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/119&oldid=553335" இலிருந்து மீள்விக்கப்பட்டது