பக்கம்:கற்பக மலர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரன் முதலியோர் 1 ff

அமைத்திருக்கிருர். அவர் உள்ளத்திற் கொண்ட கதையில் ஐந்தவித்தான் ஒருவனும் இந்திரனும் தவத்தின் ஆற்றலே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியும் இருத்தல் வேண்டும். நீத்தார் பெருமை தோன்றச் செய்து தன் சிறுமையைப் புலப்படுத்தியதனுல்தான் இந்திரனேக் கரியாக்கினர்.

இந்தக் குறளின் உரையில் காளிங்கர் என்னும் உரையாசிரியர், தன் பதம் கருதித் தவம் செய்யும் நீத்தார் மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வ மகளிரை விடுத்து, மற்று அத் தவம் அழித்து, தவம் அழியாமை நிலைகிற்கையாலும், தனது பதம் விரும்பாமை யாலும் தானே சான்ருய் அமையும் என்று கூறுகிரு.ர். இந்திரன் தவம் அழியாமல் நிற்பவன் என்றும், தன் பதம் விரும்பாதவன் என்றும் அவர் கூறுகிருர். திலோத்தமை முதலியவர்களால் தவம் குலைவாரினும் இந்திரன் தவம் உடையவனென்பது அவர் கொள்கை போலும்! அந்தத் திலோத்தமை முதலியோரால் பலகாலும் இன்பம் துய்க்கும் இந்திரன் ஐந்தவித்தானுக இருப்பது எப்படிப் பொருந்தும்?

மணக்குடவர், இந்திரன் சான்று என்றது, இவ்வுல கின்கண் மிகத் தவம் செய்வார் உளரானல், அவன் தன் பதம் இழக்கின்ருகை நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு’ என்று எழுதினர். மணிமேகலையில், ஆபுத்திரன் பலருக்கும் சோறு அளித்துப் பசிப்பிணி மருத்துவகை விளங்கிய பொழுது, அவனுடைய அறச் செயலால் பாண்டு கம்பலம் நடுங்குவதைக் கண்டு அஞ்சிய இந்திரன் அவனிடம் வந்து அவனுக்கு ஆசை காட்டியதாக ஒரு வரலாறு வருகிறது. தவம் செய்பவர் களுடைய கிலே கண்டு இந்திரன் தன் பதத்தை இழக்க நேருமோ என்று அஞ்சி அவர் தவத்துக்கு ஊறு விளக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/120&oldid=553336" இலிருந்து மீள்விக்கப்பட்டது