பக்கம்:கற்பக மலர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'1 12 - கற்பக மலர்

புகுந்ததாகப் பல கதைகள் புராணங்களில் வருகின்றன. இவற்றை எண்ணியே மணக்குடவர் உரை விரித்தார்

என்பது தெளிவு.

இந்திரன் ஐந்து அவியாமல், தவம் மிக்கவரினும் ஆற்றல் குறைந்தவன் என்ற கருத்தை உடையவர் திருவள்ளுவர் என்பதில் தடை ஏதும் இல்லை.

இந்திரனே, அகல் விசும்புளார் கோமான்’ என்று அறிந்து இந்திரன் என்ற பெயரையும் இக்குறளில் சொல் கிருர். தேவர்களுக்கு அவன் அரசன் என்பதையும் இதனுல் உணர்கிருேம்.

இந்திரனேப் பற்றிய செய்தி வரும் மற்ருெரு குறளில் அவனே வேந்தன் என்ற பெயரால் குறிக்கிருர்,

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். - (889)

'காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களே உடையார் வெகுள்வாராயின், அவர் ஆற்றலான் இந்திர னும் தன் பதம் இழந்து கெடும்’ என்பது பரிமேலழகர் உரை. நகுடன் என்பான் இந்திரன் பதம் பெற்றுச் செல் கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனல் சாபம் எய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதை உட்கொண்டு இவ்வாறு கூறினர்' என்று மேலும் விளக்கினர் அவ்வுரை யாசிரியர். . .

இங்கும் தவத்தில்ை சிறப்பு அடைந்தவர்களின் பெருமையையும், இந்திரனுடைய ஆற்றற் குறைவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/121&oldid=553337" இலிருந்து மீள்விக்கப்பட்டது