பக்கம்:கற்பக மலர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரன் முதலியோர் 1 1s.

இக் குறள் எடுத்துக் காட்டுகிறது. பரிமேலழகர் கூறிய கதையையே எண்ணித் திருவள்ளுவர் இதை அமைத்தார் என்று சொல்ல இயலாது. ஆனாலும் ஏந்திய கொள்கை யார் சீறியதனுல் இந்திரன் தன் பதவியை இழந்த வரலாறு ஒன்றை எண்ணியே அவர் இந்தக் குறளேப் பாடியிருக்க வேண்டும். -

வேந்தனும் என்ற உம்மை இந்திரன் பேராற்றல் உடையவன் என்பதைக் குறிக்க நின்றது. எவ்வளவு பெரிய ஆற்றலே உடையவனாக இருந்தாலும் தவ முனிவர் ஆற்றலுக்கு முன் அவன் ஆற்றல் குறைவுபடும் என்ற கருத்தை வற்புறுத்தவே இவ்வாறு சொன்னர்.

வேந்தன் என்பது இந்திரனுடைய பெயர்.

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’

(அகத்திணை, 5)

என்பது தொல்காப்பியம். -

இந்தக் குறளால் வேந்தனகிய இந்திரன் பேரரசன் என்பதும், ஆயினும் தவத்தினர் ஆற்றலுக்கு எதிரே அவன் ஆற்றல் தாழ்வுறும் என்பதும் புலனுயின. -

ஓரிடத்தில் திருவள்ளுவர் காமனே கினைப்பூட்டுகிரு.ர். மக்களுடைய உள்ளத்தில் காம உணர்ச்சியை ஊட்டும் தேவன் அவன். காமத்துப் பாலில் தனிப்படர் மிகுதி என்ற அதிகாரத்தின் ஒரு குறளில் அவனைப் பற்றிய செய்தி வருகிறது.

பருவரலும் பைதலும் காணுன்கொல் காமன் ஒருவர்கண் நின்ருெழுகு வான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/122&oldid=553338" இலிருந்து மீள்விக்கப்பட்டது