பக்கம்:கற்பக மலர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரன் முதலியோர் 1 15

குறளால் உய்த்துணரப் பெறுகின்றன. காமன் ஒருவர் கண் நின்று ஒழுகுவான்’ என்று பொதுவாகச் சொன்னலும், அவன் ஒழுகுதலாவது, தனக்குத் துன்பம் உண்டாகும்படி செயல் செய்வதே என்பது, பருவரலும் பைதலும் காணுன்கொல் என்பதல்ை தெளிவாகும்.

அறத்தைத் தெய்வமாகக் கொள்வது ஒரு மரபு. அறக் கடவுள், தர்மதேவதை என்று சொல்வார்கள். திருக்குறளில் அறக் கடவுள் சில இடங்களில் காட்சி தருகிறது. அன்பு இல்லாதவர்களே அறக்கடவுள் ஒறுக்கிறது; கோபம் இன்றிக் கற்று அடங்கியவனுக்கு நலம் செய்ய அவன் செல்லும் வழியில் அவன் வரும் செவ்வி பார்த்து நிற்கிறது; பிறனுக்குக் கேடு சூழ்பவனுக்குக் கேடு பயக்கிறது.

என்பி லதனை வெயில்போலக் காயுமே - அன்பி லதன அறம். (77)

'எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து வருத்துவதைப்போல, அன்பு இல்லாத உயிரை அறக் கடவுள் வருத்தும் என்பது பொருள். எலும்பு இல்லாத புழுவை வெயில் தனியே கொடுமை செய்து வருத்துவதில்லை. எல்லா இடங்களிலும் வீசுவதுபோல நடுநிலையில் நின்று அது வீசுகிறது. ஆயினும் தன்னுடைய வலியின்மையால் புழு அதனைத் தாங்காமல் மாய்கிறது. அவ்வாறே அறக்கடவுள் நடு கிலேயில் நின்று தன் ஆணேயைச் செலுத்துகிறது. அன்பு இல்லாத உயிர்கள் அவ்வாணமுன் கிற்கமாட்டாமல் ஒழிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/124&oldid=553340" இலிருந்து மீள்விக்கப்பட்டது