பக்கம்:கற்பக மலர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கற்பக மலர்

அன்பு உள்ளாரை அறம் காய்வது இல்லை என்ற பொருளும் இதல்ை பெறப்படுகிறது. -

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130).

அறக் கடவுள் யாரிடம் சேரலாம் என்று ஏங்கி நிற்கிறதாம். எவன் சினத்தை அடக்கினவனே, எவன் நன்கு கற்று அடக்கத்திற் சிறந்து நிற்கிருனே அவன் வருகிருன் என்று தெரிந்து, அவன் வரும் வழியில் காலம் பார்த்து நிற்குமாம்.

இப்பெற்றியான அறம் தானே சென்று அடையும் என்பதாம் என்று பரிமேலழகர் இக்குறளின் கருத்தை உரைப்பார். -

தியாருக்குத் தீங்கு விளையக் காரணமாகும் அறக் கடவுள், நல்லாருக்கு நன்மை செய்யும் என்ற உண்மையை இந்த இரண்டு குறள்களாலும் தெரிந்து கொள்ளலாம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க; குழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)

தீவினை அச்சம் என்னும் அதிகாரத்தில் வருவது இக் குறள். ஒருவன் பிறனுக்குக் கேடு உண்டாக்கும் காரியத்தை மறந்தாவது எண்ணக் கூடாது; அப்படி எண்ணினால் அவனுக்குத் தீங்கு உண்டாக்கும் காரியத்தை அறக்கடவுள் எண்ணும்' என்பது இதன் பொருள். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/125&oldid=553341" இலிருந்து மீள்விக்கப்பட்டது