பக்கம்:கற்பக மலர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானேர்

இம்மை, மறுமை, வீடு என்று மூன்று கிலே களேச் சொல்வது ஒரு மரபு. இம்மை என்பது இந்த உலக வாழ்வு; மறுமை என்பது இந்த உலக வாழ்வுக்குப் பிறகு அமையும் வாழ்வு. அந்த வாழ்வு சொர்க்க இன்ப வாழ்வாகவும் இருக்கலாம்; நகரத் துன்ப வாழ்வாகவும் இருக்கலாம். அதன்பின் மீண்டும் இங்கே வந்து உயிர் பிறக்கும்; அல்லது வீட்டை அடையும். வீடு என்பது மீட்டும் பிறப்பு இறப்புக்களில் அகப் படாமல் என்றும் மாருமல் உள்ள இன்ப வாழ்வு. இதையே மோட்சமென்றும் முக்தியென்றும் சொல்வார்கள். இவ்வுலகில் நல்வினை செய்தவர்கள் தேவ லோகத்தில் சொர்க்க இன்பம் பெற்று நல்வினைப் பயன் முடிந்தபின் வீடு பெறுவார்கள். சொர்க்கத்தைத் துறக்கமென்றும் வானுலகு என்றும் சொல்வது வழக்கம். வானுலகத்துக்கு அப்பால் விடு என்ற கிலே இருப்பதைத் திருவள்ளுவர் கூறுகிருர், -

யானென தென்னும் செருக்கறுப்பான் வானுேர்க்

குயர்ந்த உலகம் புகும். - - (346) என்பதில் வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பது வீட்டைக் குறித்து கிற்கிறது. வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்பது சொற்பொருள். -

இந்த உலகத்துக்கும் வீட்டுலகத்துக்கும் இடையே இன்ப வாழ்வை உடையதாக இருப்பது அமரருலகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/127&oldid=553344" இலிருந்து மீள்விக்கப்பட்டது