பக்கம்:கற்பக மலர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகுேச் đi #

அங்கே வாழ்கிறவர்கள் தேவர்கள். அமரருலகைப் பற்றியும் பல செய்திகளைத் திருவள்ளுவர் சொல்கிருர், புண்ணியம் புரிந்தவர்கள் அந்தப் புண்ணியப் பயனே நுகரத் துறக்கம் செல்வார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

'புண்ணியம் புரிவோர் புகுவது துறக்கம் என்னுமீ தருமறைப் பொருளே’

என்பது கம்பர் வாக்கு. புண்ணியம் என்பது கல்வினே. கல்வினை பல வகைப்படும். திருவள்ளுவர், இன்னது செய் தார் அல்லது இன்னபடி வாழ்ந்தார் துறக்கம் அடைவார் என்று பல குறள்களில் சொல்கிரு.ர்.

கற்புடைய பெண்டிரும், விருந்து ஒம்புவாரும், அடக்க முடையவரும், பிறர் பொருளேத் திருடாதவரும் தேவருல கத்தை அடைவார்கள் என்கிரு.ர்.

பெற்ருற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. . (58)

(பெண்கள் தம்மை மனவியராகப் பெற்ற கணவனே வணங்கி அவனைத் தம் வசமாகப் பெற்ருரால்ை தேவர்கள் வாழும் உலகின்கண் அவர்களால் பெருஞ் சிறப்பினேப் பெறுவார்கள்.) .

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு. (86)

[தம்மிடம் வந்து செல்லும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பிவிட்டுப் பின்பு வரும் விருந்தினர்களை எதிர் பார்த்து

கிற்கும் இல்வாழ்வான் மறுபிறப்பில் தேவலோகத்தில் உள்ள அமரர்களுக்கு நல்ல விருத்தினன் ஆவான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/128&oldid=553345" இலிருந்து மீள்விக்கப்பட்டது