பக்கம்:கற்பக மலர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 கற்பக மலர்

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். (121)

(அடங்கியிருக்கும் இயல்பு ஒருவனைத் தேவருலகத்துக்குச் செலுத்தும்; அடங்காமையோ தங்குவதற்கரிய இருள் கிரம்பிய நரகத்தில் செலுத்தும்.) -

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. (290)

(களவினேச் செய்பவருக்கு உடம்பும் தவறும்; களவு செய் யாதவருக்குத் தேவருலகமும் தவருது.1

மனிதர்களேவிடத் தேவர்கள் உயர்ந்தவர்கள். ஆதலின் யாரையேனும் சிறப்பித்துச் சொல்லும் போது அவர்களுக்கு உவமையாகத் தேவர்களேச் சொல்வார்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் (50) என்ற குறள், வாழும் வகையில் செம்மையாக இவ்வுலகத் தில் வாழும் ஒருவனே வானுலகில் வாழும் தேவருள் ஒரு வகை எண்ணி மதிப்பார்கள் என்று கூறுகிறது. அப்படியே கேள்விச் செல்வம் உடையவர்களும் தேவர்களோடு ஒப்ப மதிக்கப் பெறுவார்கள் என்று ஒரு குறள் கூறுகிறது.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்

ஆன்ருரோ டொப்பர் நிலத்து. (413) செவியுண வாகிய கேள்வியின உடையார் நிலத்தின் கண்ணர் ஆயினும் அவி உணவினையுடைய தேவ ரோடு ஒப்பர்’ என்று பரிமேலழகர் இதற்கு உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/129&oldid=553346" இலிருந்து மீள்விக்கப்பட்டது