பக்கம்:கற்பக மலர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பக மலர் "கற்பகத்தின் பூங்கொம்போ’ என்று சேக்கிழார் பாடுகிருர். 'கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை’ என்பது திருவிசைப்பா. கற்பகத்தைக் கண்ணுரக் கண்டேன் யானே’ என்று அப்பர் திருவாய்மலர்ந் தருளுகிருர். எல்லாம் உவமையும் உருவகமுமாக உள்ளவை.

கற்பக மலர் ஒன்றை ஒரு புலவர் காட்டுகிருர். மற்ற மலர்களுக்கும் அதற்கும் வேறுபாடு உண்டு. உலக மரங்களின் மலர்கள் வாடும். கற்பக மரத்து மலர் வாடா தாம். எவ்வளவு நாளானுலும் புலராதாம். கோடையிலும் குளிரிலும் நிற்கும். நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள், யுகம் என்று காலக் கணக்கு எவ்வளவு ஆலுைம் நிற்கும்; மலர்ச்சி மாருது மணத்துடன் நிற்கும். மலருக்கு மலர்ச்சி, மென்ம்ை, தண்மை, மணம், தேன் இருத்தல் இலக்கணம். கற்பக மலரிலும் இவை உண்டு. அதிலும் தேன் பிலிற்றும். இந்த இயல்புகளிலே குன்ருத அந்த மலர் தளிரி னிடையே தோன்றுகிறதாம். அந்தத் தெய்வத் திருமலரைப் புலவர், . .

. . -குன்ருத • , செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்,

என்று சொல்கிருர்.

எதற்காக அந்தத் தெய்வத் திருமலரைக் கொண்டு வருகிருர்? கற்பனையிலே வளர்ந்த அதனை உண்மையாக நமக்கு முன் உள்ள மலர் ஒன்றைக் காட்டி, "இது கற்பகத்தின் தெய்வத் திருமலர்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/13&oldid=553223" இலிருந்து மீள்விக்கப்பட்டது