பக்கம்:கற்பக மலர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாளுேர் - f g i

கூறி, துன்பம் அறியாமையான் தேவரோடு ஒப்பர் என்று கூறினர்’ என்று விளக்குவார். -

நிலவரை'நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்ருது புத்தேள் உலகு (234) என்பது ஒரு குறள். ஒருவன் இந்த நிலவுலகத்தின் எல்லேயில் இறவாமல் நீண்டு நிற்கும் புகழ் உண் டாகும்படி செய்வானுயின், தேவருலகம் அவனே மதிக்குமே யன்றித் தன்னை அடைந்த ஞானிகளே மதியாது’ என்பது இதன் பொருள். இங்கே தேவர்களும் போற்றும் வகையில் வாழும் வாழ்வு ஒன்று உண்டு என்பதைக் குறிக்கிருர் வள்ளுவர். அதன் வாயிலாகத் தேவர்கள் போற்றுவது ஒருவனுடைய பெருமைக்குத் தலே யளவு என்ற கருத்தையும் புலப்படுத்துகிரு.ர். புகழும், புத்தேளுலகு போற்றுதலும் ஒருங்கே கிடைத்தலைச் சொல்கிருர்.

வேறு ஒரு குறளில் புகழ் இம்மையிலும் புத்தேளுலகு மறுமையிலும் பெறுவதற்குரியவை என்பதை எதிர் மறை வாயிலாகக் குறிப்பிக்கிருர். மானம் இழத்து தன்னே இகழ்வார் பின்னே சென்று வழிபட்டு கிற்றல் மிகவும் இழிவானது. மனிதன் புகழுக்காக ஒன்று செய்யவேண்டும்; இல்லேயானல் அமரருலக வாழ்வுக்காகவாவது ஒன்று செய்யவேண்டும். மானம் இழந்து கிற்றலால் இந்த இரண்டுமே இல்லையாகி விடும். அப்படி இருக்க, அத்தகைய செயலைச் செய்வது ஏன்?-இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிருர் திரு வள்ளுவர். - -

புகழ்இருருல்; புத்தேள்நாட்டு உய்யாதால், என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. - (966)

கற்பக-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/130&oldid=553347" இலிருந்து மீள்விக்கப்பட்டது