பக்கம்:கற்பக மலர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கற்பக மலர்

(மானத்தை விட்டுத் தன்னே அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற கிலே, இவ்வுலகத்துப் புகழ் பயவாது; ஏனேப் புத்தேள் உலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வது யாது?) \a

இங்கே புத்தேள் நாடு செல்வது சிறப்பு என்ற கருத் துக் குறிப்பாக அமைந்திருக்கிறது. -

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவி னல்ல பிற - (213)

என்ற குறள் தேவருலகத்தில் மிகச் சிறந்தவற்றைக் காணலாம் என்னும் கருத்தைத் தன்னுட் பொதிந்து கொண்டு கிற்கிறது. தேவலோகத்திலும் இதைக் காண முடியாது’ என்று சொல்லும்போது அந்த உண்மை தேவலோகத்தின் சிறப்பைக் காட்டுகிற தல்லவா?

தேவலோகம் சிறந்த போகத்தைத் தருவது.

புலத்தலிற் புத்தேள்நாடு உண்டோ, நிலத்தொடு

நீர்இயைந் தன்னு ரகத்து. (1323)

(நிலத்தோடு நீர் கலந்தாற் போன்ற ஒற்றுமையை உடைய காதலரிடம் ஊடல் கொள்வதைப் போல, நமக்கு இன்பம் தரும் தேவருலகம் உண்டோ?) -

உவமை சொல்லும்பொழுது உயர்ந்த பொருளையே எடுத்துக் கூறவேண்டும். தாமரை போன்ற முகம் என்னும்போது முகத்தைக் காட்டிலும் சிறந்தது தாமரை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே அந்த உவமை எழுகிறது.

"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலே’ என்று உவமையின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/131&oldid=553348" இலிருந்து மீள்விக்கப்பட்டது