பக்கம்:கற்பக மலர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 - கற்பக் மலர்

வார்கள். கயவரும் அப்படித்தான் செய்கிறர்கள்’ என்கிருர், -

தேவர் அனயர் கயவர்; அவரும்தாம் மேவன செய்தொழுக லான். - (1370)

தேவர்கள் தாம் விரும்புவனவற்றைச் செய்து வாழ் கிறவர்கள் என்ற உண்மையை உளம் கொண்டு பாடியது

இது.

இத்தகைய தேவர்களே உலகத்தினர் வழிபடுகிரு.ர்கள். கோயில் கட்டிப் பூசை செய்கிருர்கள். நாள் தோறும் செய்வதற்குப் பூசை என்றும், சில சிறப்பான காலங்களில் செய்வதற்கு விழா என்றும் பெயர். இவற்றை முறையே கித்தியம் என்றும் நைமித்திகம் என்றும் வடமொழியில் சொல்வார்கள். விழா வெடுத்தும் பூசனை ஆற்றியும் தேவர்களே வழிபடுவது அவசியம் என்பது திருவள்ளுவர் கொள்கை. மழை வளம் உலக வாழ்வுக்கு இன்றியமையாதது என்று சொல்ல வந்த அவர், 'மழை இல்லாவிட்டால் தேவர்களுக்கும் விழாவும் பூசையும் நடவா என்கிரு.ர்.

சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல் வாளுேர்க்கும் ஈண்டு. (8)

தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழாவொடு கூடிய பூசை நடவாது, மழை பெய்யாதாயின்’ என்பது பரிமேலழகர் உரை. மழை பெய்யாக்கால் வரும் குற்றம் கூறுவார் முற்பட நான்கு வகைப்பட்ட அறங்களில் பூசை கெடும் என்ருர்’ என்று மணக்குடவர் எழுதினர். - * .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/133&oldid=553350" இலிருந்து மீள்விக்கப்பட்டது