பக்கம்:கற்பக மலர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாளுேர் I35

'மண்ணின்மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி

மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி விண்ணவர்க்கும் சிறப்பில்வரும் பூசை யாற்ற மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு’

என்று சேக்கிழார் இந்தக் கருத்தை எடுத்து ஆள் கிறார்.

எரியோம்பி வேள்வி செய்து அவிவழங்கித் தேவர்களே வழிபடுவது ஒரு முறை. அவ்வாறு வேள்வியிற் கொடுக்கும் அவியையே உணவாகக்

கொள்பவர்கள் அவர்கள். செவிச் செல்வமாகிய கேள்வியை உடையவர்களின் சிறப்பைச் சொல்ல வந்த திருவள்ளுவர், அவர்கள், 'அவியுணவின்

ஆன்ருரோடு ஒப்பார் நிலத்து (413) என்ருர், அவி யாகிய உணவைப் பெறும் பெரியோர்’ என்று தேவர் களேச் சொல்கிருர். செவிச் செல்வம் உடையாரின் சிறப்பைக் குறிக்கத் தேவர்களே உவமையாக்குகிறார். ஆதலின் தேவர்கள் சிறப்புடையவர்கள் என்ற எண்ணத்தோடு சொல்கிருர். அவ்வாறு சொல்லு கையில் அத்தேவருக்குரிய அடைகளும் அவர்களின் சிறப்புக்குக் காரணமாகவே இருக்க வேண்டும். தேவர்கள் அவியுணவு கொள்பவர்கள் என்பது அவர் களேச் சிறப்புத் தோன்றக் கூறியதேயன்றி வேறு ஆகாது. ஆகவே, அவியுணவு கொடுத்தலும் சிறப்பு என்னும் உண்மையும் அதனோடு இணேந்து புலை கிறது.

தேவர்களே அமரர், ஆன்ருேர், இமையார், தேவர், புத்தேளிர், வானேர், விசும்புளார் என்னும் சொற்களால் கூறுவர் திருவள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/134&oldid=553351" இலிருந்து மீள்விக்கப்பட்டது