பக்கம்:கற்பக மலர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கற்பக மலர்

இதுவரையில் கூறியவற்ருல் தேவருலகம் இன்ப வாழ்வை உடையதென்றும், நல்வினே செய்வார் அவ்வுலக வாழ்வு பெறுவாரென்றும், அவ்வாழ்வு மிகச் சிறந்ததென்றும், பெருமைக்கும் இன்பத்துக்கும் 2- 6յ16Ծ3ԼԸ)tԱ T 5 எடுத்தாளும் உயர்வுடையதென்றும், அதற்கும் மேற்பட்டது வீடென்றும் அறிந்துகொள் ளலாம். தேவர்கள் நல்லவர்களேத் தம் உலகத்துக்கு வரவேற்பவர்கள் என்பதும், சுதந்தர வாழ்வுடையவர் என்பதும், இவ்வுலகத்தார் எடுக்கும் விழாவும் செய்யும் பூசையும் உடையவர் என்பதும், வேள்வியில் தரும் அவியுணவைப் பெறுபவர் என்பதும் தெரியவரு கின்றன.

கடவுளேயும் தெய்வங்களேயும் தேவர்களையும் பற்றித் திருவள்ளுவர் கூறிய செய்திகளைப் பார்த்தோம். அணங்கு, தென்புலத்தார் என்று வேறு சிலரை அங்கங்கே அவர்

குறிக்கிரு.ர். -

. மோகினிப் பிசாசு என்று ஒன்று இருப்பதாகவும் அது ஆடவனேப் பற்றில்ை அவன் சோர்ந்து போவா னென்றும் நாட்டு மக்கள் சொல்வதுண்டு. அது போன்று தாக்கணங்கு என்ற தெய்வம் ஒன்று உண்டு. 'திண்டி வருத்தும் தெய்வம்' என்று அதைச் சொல்வார்கள்.

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு . (918)

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு . . . (1081)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/135&oldid=553352" இலிருந்து மீள்விக்கப்பட்டது