பக்கம்:கற்பக மலர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாளுேர் 12穹

என்று அதனே அணங்கு என்றே திருவள்ளுவர் கூறுவார். முதலில் உள்ள குறளின் உரையில் அணங்கு - காம நெறியான் உயிர் கொள்ளும் தெய்வ மகள்' என்று பரிமேலழகர் எழுதினர். பரத்தையருடைய பழக்கம் தாக்கணங்கு தாக்கியதை ஒக்கும் என்பது குறளின் கருத்து. இரண்டாவது குறள், தலைவியை முதல் முதலிலே கண்ட தலைவன் அவளே ஐயுற்றுக் கூறியது. அழகு மிகுதி 故_HTö இருத்தலாலும், தன்னே வருத்தியதாலும், அணங்கோ? என்று ஐயுற்ருன்.

ஒரு குறளில் தாக்கணங்கு என்னும் தொடரையே ஆளுகிரு.ர்.

தலேவி தன்னைப் பார்த்தபோது அப்பார்வை தன்னே வருத்தியதாகச் சொல்கிருன் தலைவன்.

நோக்கினுள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானக்கொண் டன்ன துடைத்து. (1082)

'இந்த அழகி நான் தன்னைப் பார்த்தவுடன் அதன் எதிரே என்னைப் பார்க்கும் பார்வை, தாக்கி வருத்தும் இயல்பையுடைய அணங்கு ஒரு சேனையையும் துணைக்குக் கொண்டு வந்தாற் போன்ற தன்மையை உடையதாக இருக்கிறது என்பது இதன் பொருள். தாக்கும் இயல் புடைய அணங்காதலின் அதற்கு இப்பெயர் வந்தது.

"தாக்கணங் காவ தெவன்கொல் அன்னய்' என்று ஐங்குறுநூற்றிலும், "தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டு’ என்று சிலப்பதிகாரத்திலும் இப்படியே வேறு பல நூல்களிலும் தாக்கணங்கைப் பற்றிய செய்திகள் வருகின்றன.

தென்புலத்தார் என்ற ஒரு வகையினரைத் திரு வள்ளுவர் குறிக்கிருர். பிதிரர் என்றும் பிதிர்த் தேவதைகள் என்றும் கூறப்பெறுபவர்கள் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/136&oldid=553353" இலிருந்து மீள்விக்கப்பட்டது