பக்கம்:கற்பக மலர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த நிலை

தேவர்கள் வாழும் வானுலகம் இப்பிறவியில் நல்வினே செய்வாருக்கு உரியது என்பதைப் பல குறள்களில் திருவள்ளுவர் சொல்வதைப் பார்த்தோம். அது இந்த உலகத்தினும் சிறந்தது; மேன்மை உடையது; மேலே இருப்பதாகக் கற்பனே பண்ணப்படுவது; ஆதலின் அதனே மேலுலகம் என்றும் சொல்வர்.

மேலுலகம் - இல்லெனினும் ஈதலே நன்று' (222)

என்ற குறளில் புண்ணியத்தின் பயணுகக் கிடைக்கும் சொர்க்கத்தை மேலுலகம் என்ருர் திருவள்ளுவர்.

கல்வினை செய்தவர்கள் புத்தேளுலகைப் பெறுவது போலத் தீவினே செய்தவர்கள் கரகம் பெறுவார்கள் என்பது இந்த நாட்டுச் சமயங்களின் நம்பிக்கை, நரகத்தை கிரயம் என்றும் சொல்வர். அது துன்பம் கிறைந்தது, இருள் கிரம்பியது என்று நூல்கள் கூறும். நரகங்கள் பலவென்றும், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான துன்பத்தை உயிர்கள் அநுபவிக்கும் என்றும் புராணங்கள் பேசுகின்றன.

1. மேலுலகம் என்பதற்கு வீடு என்று பொருள் கொண்டார் பரிமேலழகர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/138&oldid=553355" இலிருந்து மீள்விக்கப்பட்டது