பக்கம்:கற்பக மலர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கற்பக மலர்

சொர்க்கத்துக்கு எதிர்த்தட்டிலே நரகம் ஒன்று உண்டு என்பதைத் திருவள்ளுவரும் கூறுகிரு.ர். சொர்க்கம் இன்பமே நிரம்பியது; நரகம் துன்பமே நிறைந்தது; இவ்வுலகம் இன்பமும் துன்பமும் கலந்தது.

பலவகை நற்செயல்களே இவ்வுலகிலே செய்தவர்கள் தேவலோக வாழ்வில் இன்பம் பெறுவார்கள் என்று சொன்ன திருவள்ளுவர், பல வகையான தீய செயல்களைப் புரிந்தவர்கள் நரக வாழ்வில் துன்பம் அடைவார்கள் என்றும் சொல்கிருர். நல்லவற்றைச் செய்து தீயவற்றை விலக்க வேண்டும் என்று சொல்லும் சிறந்த நீதிநூல் திருக்குறள். தீயவற்றை விலக்குதற்குரிய காரணங்களைச் சொல்லும்போது, இம்மையில் பழியையும் துன்பத்தையும், பிறகு நரகத் துன்பத்தையும் அவை உண்டாக்கும் என்று சொல்கிரு.ர். - -

நரகத்தை ஆரிருள், தீயுழி, இருள் சேர்ந்த இன்ன உலகம், அளறு என்று வள்ளுவர் கூறுகிருர். நரகத்தைப் பெறுகிறவர்கள் யார் யார்?

அடக்கத்தின் பெருமையைச் சிறப்பிக்க வந்தவர் அதை உடையவர் தேவருலக வாழ்வு பெறுவர் என்று கூறியதோடு, எதிர்மறை முகத்தால் அடங்காதவர் கரக வாழ்வு பெறுவர் என்கிரு.ர்.

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை , ஆரிருள் உய்த்து விடும். . (121)

அடங்காத இயல்பு ஆரிருளிற் செலுத்தி விடுமாம். அமரருள் என்று தேவருலகத்தைச் கட்டியவர். அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/139&oldid=553356" இலிருந்து மீள்விக்கப்பட்டது