பக்கம்:கற்பக மலர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த நிலை 1 3f.

எதிராகிய நரகத்தை ஆரிருள் என்ருர். ஆர் இருள்பாவம் தங்குதற்குரிய இருள். இருள் என்பது ஒர் கரக விசேடம்’ என்று பரிமேலழகர் உரை எழுதினர். இருள் என்பது அறியாமைக்கும் துன்பத்துக்கும் உரியதாக வழங்கும் சொல். இங்கே, நரகம் இருள் நிரம்பிய இடம் ஆதலின் இருள் என்று சொன்னர். இது பின்னலே வரும் குறள் ஒன்ருல் தெளிவாகும்.

இயல்பாக எல்லா உயிர்களிடத்திலும் கருணையுடன் இருக்கவேண்டும். அந்தக் கருணையையே அருள் என்று கூறுவர். அதன் சிறப்பை அருளுடைமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியிருக்கிருர். அருள் சேர்ந்த நெஞ்சை உடையவர்கள் நலம் பெறுவர் என்றும், அப் பண்பு இல்லாதவர் துன்பம் உறுவர் என்றும் சொன்னர். அருளுடையார் நலம் பெறுவதோடு, துன்பம் அடைய மாட்டார் என்றும் கூறி, அதன் பெருமையை எடுத்துக் காட்டுகிரு.ர். х .

அருள்சேர்ந்த நெஞ்சிர்ைக் கில்லை, இருள்சேர்ந்த இன்னு உலகம் புகல். (243)

அந்தக் குறள், அருள் செறிந்த நெஞ்சினை உடை யார்க்கு, இருள் செறிந்த துன்ப உலகத்துள் புகுதல் இல்லை என்று சொல்கிறது. இங்கே, இருள் சேர்ந்த இன்னு உலகம்’ என்றது. நரகத்தை. இங்கே இத் தொடரை விளக்க வந்த பரிமேலழகர், திணிந்த இருளே யுடைத்தாய்த் தன்கட் புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை; அது கீழ் உலகத்துள் ஒரிடமாதலின் உலகம் எனப்பட்டது என்று எழுதினர். தேவருலகம் ஒளி யுடையது; மேலுலகமாக இருப்பது. அதற்கு எதிரான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/140&oldid=553357" இலிருந்து மீள்விக்கப்பட்டது