பக்கம்:கற்பக மலர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f $3 கற்பக மலர்

நரகம் இருள் நிரம்பியது; கீழுலகமாக இருப்பது. நரகங்கள் பல என்பதை எண்ணி, துன்பம் செய்வது ஓர் நரகத்தை' என்று பரிமேலழகர் எழுதினர்.

இன்னமையும் இருளும் கிரம்பியது நரகலோகம் என்பதை மேலே காட்டிய இரண்டு குறள்களும் புலப் படுத்துகின்றன.

அழுக்காற்றின் தீமையைச் சொல்ல வந்தவர்,

அழுக்கா றென.ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் (168)

என்று கூறுகிருர். அழுக்காறு ஒருவனுக்கு இம்மையில் செல்வத்தை அழித்து, மறுமையில் நரகத்தில் அழுத்தி விடுமாம். நரகத்தைத் தீயுழி என்கிருர். அதற்குத் திய இடம் என்பது பொருள்; இங்கே நரகத்துக்காயிற்று. தீயவர் சேரும் இடம், துன்பத்தையே நுகரச் செய்யும் இடம் ஆதலின் இப் பெயர் பெற்றது.

வேறு இரண்டு இடங்களில் நரகத்தை அளறு என்று குறிக்கிருர். புலால் உண்பதனுல் விளேயும் விளைவையும், பேதைமையால் உண்டாகும் துன்பத்தையும் கூறும் இடங்கள் அவை.

உண்ணுமை உள்ள துயிர்நிலை, ஊன் உண்ண அண்ணுத்தல் செய்யா தளறு. (225)

‘புலால் உண்ணுமையில்ை பல உயிர்கள் உடம்பில் கிற்கும் கிலே இருக்கிறது; அந்த கிலே குலையும்படி ஒருவன் ஊனே உண்டால் அவனே விழுங்கிய நரகம் பிறகு உமிழாது என்பது இதன் பொருள். அண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/141&oldid=553358" இலிருந்து மீள்விக்கப்பட்டது