பக்கம்:கற்பக மலர்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த நிலை f 33

ளுத்தல்-வாயைத் திறத்தல். புலால் உண்பவன் நரக வாழ்வை நீண்ட காலம் பெறுவான் என்பதையே இந்த முறையில் குறிப்பித்தார். ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம் என்று பரிமேலழகரும் கருத்தை விளக் கினர்.

ஒருமைச் செயல் ஆற்றும் பேதை, எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. (835)

'அறியாமையையுடைய பேதை வரும் பிறவி வகைகளாகிய ஏழிலும் தான் புகுந்து அழுந்தும் நரகத்தை, இந்த ஒரு பிறப்புக்குள்ளே செய்து கொள்ள வல்லவனவான்’ என்பது பொருள். ஏழு பிறவிகளில் செய்த பாவத்தினுல் எந்த நரக வாழ்வு கிடைக்குமோ, அந்தக் கொடிய வாழ்வை ஒரு பிறவியிலே செய்த செயலாலே அடைந்து விடுவானம். அளறு என்ற சொல்லுக்குச் சேறு என்பது ஒரு பொருள். தன்னிடம் அகப்பட்டார் மீள முடியாதபடி மேலும் மேலும் அழுந்தச் செய்வதல்ை நரகத்தை அளறு என்ருர். இக்குறளில் அழுந்தும் அளறு என்று சொன்னது இதனைப் புலப் படுத்தும்.

ஒளியற்றது, இருள் நிரம்பியது, துன்பம் நிறைந்தது, தீயது, தன்பால் வந்தவர்களே எளிதில் வெளி விடாதது, மேலும் மேலும் ஆழப் பண்ணுவது என்ற நரகத்தின் இயல்புகளைத் திருக்குறளின் வாயிலாக நாம் உணர்கிருேம்.

மூவுலகம் என்பது ஒரு வழக்கு. இதை, முப் புணர் அடுக்கு' என்று புறநானூறு கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/142&oldid=553359" இலிருந்து மீள்விக்கப்பட்டது