பக்கம்:கற்பக மலர்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 34 கற்பக மலர்

மேல், நடு, கீழ் என்ற மூன்றையும் குறிப்பது அது. தேவருலகாகிய சொர்க்கம் மேல் இருப்பது; நாம் வாழும் நிலவுலகம் இடையில் இருப்பது; நரக லோகம் கீழே இருப்பது. உலகில் பிறந்த உயிர்கள் பல பல செயல் களேச் செய்கின்றன. நற்செயல்களேயும் தீய செயல் களேயும் புரிகின்றன. கல்வினைகள் மிகுதியானல் சொர்க்க பதவியையும், தீவினேகள் மிகுதியானல் நரகத் துன்பத்தை யும் பெறும். இரு வினேகளும் கலந்திருந்தால் நிலவுலகில் பிறந்து இன்ப துன்பத்தை நுகரும். சொர்க்கமும் நரகமும் அநுபவத்திற்கே உரியவை. நிலவுலகம் அநுபவத்துக்கும் செயலுக்கும் உரியது. உயிர் இந்த மூன்று உலகங்களிலும் சென்று சென்று உழன்றுகொண்டே இருக்கும். .

'உருமாறிப் பவக்கடல்வீழ்ந் துரசலெனத் தடுமாறி

உழலும் மாக்கள்’

என்று ஒரு புலவர் கூறுகிரு.ர்.

உயிரின் வாழ்க்கைப் பயணம் நிற்பதே இல்லை. இந்த மூன்று உலகங்களிலும் புகுந்து புகுந்து புறப்படுகின்றது. அறியாமையினின்றும் நீங்கிப் பற்றற்று இரு வினே களிலிருந்தும் நீங்கினல் இந்த மூன்று உலகங்களின் வாழ்வினின்றும் உயிர் நீங்கி விடுதலை பெறும். இன்ப துன்பங்களே நுகரும் நுகர்ச்சி இருக்கும் வரையில் உயிருக்குப் பிறப்பு உண்டு. பிறப்பு-இறப்பு, இன்பம். துன்பம், செயல்-நுகர்ச்சி, போக்கு-வரவு, இரவு-பகல், அறிவு-அறியாமை, நன்மை-தீமை முதலிய இரட்டைகளி னின்றும் விடுபட்ட உயிருக்குச் சொர்க்கம், நிலவுலகம், நரகம் என்ற மூன்று உலகிலும் வாழும் வாழ்க்கை இராமற் போய்விடும். அந்த வாழ்க்கையினின்றும் விடுதலே பெறுவதே வீடு. முக்தி என்பதும் அதுதான். ‘. . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/143&oldid=553360" இலிருந்து மீள்விக்கப்பட்டது