பக்கம்:கற்பக மலர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- முடிந்த நிலை 135

முக்தி என்னும் கிலே உயிருக்கு முழுமை தருவது. இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அப்பாற்பட்ட ஆனந்தத்தை நுகரும் கிலே அது. இன்ப துன்ப நுகர்ச்சி மனத்தைச் சார்ந்தது. உயிர் முக்தியைச் சாரும்போது மனம் அழிந்துவிடும். ஆகவே, அங்கே நுகர்ச்சியைப் பெறுவது உயிர். உயிரில் நேரே புகும் இன்பமே வீட்டின்பம். வீட்டின்பத்தின் இயல்பை இந்த நாட்டிலுள்ள சமயத் தினர் வெவ்வேறு வகையிலே சொன்னலும், அந்த இன்பம் சுகதுக்கங்களுக்கு அப்பாற் பட்டது, உயிரால் நுகரப்பெறுவது என்பதை யாவரும் ஒப்புக்கொள் கின்றனர். - -

மனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. முடிந்த முடிபாகிய உறுதிப் பொருள் வீடு அல்லது முக்தி.

வீடு என்பது மேலே சொன்ன மூன்று நிலை களுக்கும் அப்பாற் பட்டது. நரகத்தினும் உயர்ந்தது நிலவுலகம்; அதனினும் உயர்ந்தது தேவருலகம்; அதனினும் உயர்ந்தது வீட்டுலகம். அந்த முடிந்த நிலை யாகிய வீட்டைப் பற்றிய செய்திகளைத் திருவள்ளுவர் கூறுகிருர்.

திருக்குறள் முப்பால் என்னும் ஒரு பெயரை உடையது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களே உடையதாதலின் அப்பெயர் பெற்றது. வீட்டுப் பால் என்று தனியே அவர் கூறவில்லை. ஆயினும் வீட்டு நெறியைப்பற்றி அடியோடு கூருமல் விட்டுவிடவும் இல்லை. விடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா கிலேமைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/144&oldid=553361" இலிருந்து மீள்விக்கப்பட்டது