பக்கம்:கற்பக மலர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கற்பக மலர்

ஆதலின், துறவறமாகிய காரணவகையால் கூறப்படுவ தல்லது இலக்கண வகையால் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனே மூன்றுமேயாம்' என்று பரிமேலழகர் திருக்குறள் உரைப்பாயிரத்தில் எழுதுகிரு.ர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினுர்க்கினியர் ஓரிடத்தில், தொல்காப்பியர் வீடு கூருரோ எனின், அகத்தியனரும் தொல்காப்பியனரும் வீடு பேற்றுக்கு கிமித்தம் கூறுதலன்றி, வீட்டின் தன்மை இலக்கணத்தால் கூருர் என்று உணர்க....................... இக்கருத்தானே வள்ளுவனரும் முப்பாலாகக் கூறி மெய் உணர்தலான் வீடு பேற்றுக்கு நிமித்தம் கூறினர்’ என்று உரைத்தார். (தொல்காப்பியம், சிறப்புப்பாயிர உரை.)

ஆகவே திருவள்ளுவர் வீட்டின் இலக்கணத்தைத் தனியே விரித்துக் கூருவிட்டாலும் அதைப்பற்றிய செய்திகளைச் சொல்லியிருக்கிருர் என்று தெரிகிறது.

வீட்டுலகம் எல்லாவற்றினும் உயர்ந்தது; வானவர் உலகத்தினும் உயர்ந்தது. இந்தக் கருத்துக்களைத் திருக் குறளிற் காணலாம்.

உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்

வரன் என்னும் வைப்புக்கோர் வித்து. (24)

'அறிவு என்னும் அங்குசத்தால் ஐந்து பொறிக ளாகிய யானைகளே அவை போனவழி போகாமல் தடுத்துக் காப்பவன், எல்லா உலகத்திலும் மேலானது என்று சொல்லப்படும் வீட்டு கிலத்திற் சென்று முளைக்கும் வித்துப் போன்றவன்' என்பது இதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/145&oldid=553362" இலிருந்து மீள்விக்கப்பட்டது