பக்கம்:கற்பக மலர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த திலே 13?

பொருள். இங்கே வீட்டை வரன் என்னும் வைப்பு என்ருர் வரன் என்பதற்கு மேலானது என்பது பொருள். எல்லாவற்றிற்கும் மேலான நிலை முத்தி யாதலின் இவ்வாறு கூறினர். பொதுவாக மேலுலகம் என்று வானுலகைச் சொல்வது வழக்கம். அந்த மேலுல கத்துக்கும் மேலுலகம் இது என்பதையும் ஒரு குறள் குறிக்கிறது.

. யான் என தென் னும் செருக்கறுப்பான் வானுேர்க்

குயர்ந்த உலகம் புகும். (346)

இதில், வானேர்க்குயர்ந்த உலகம் என்றது வீட்டை. வானுேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்று பரிமேலழகரும், வானுேராகிய கடவுளர்க் கெல்லாம் மேற்பட்ட முழுப் பேரின்பமாகிய முத்தி என்று காளிங்கரும் எழுதினர்.

தேவருலகு, நிலவுலகு, கரகம் என்னும் மூன்றிலும் சென்று வாழும் உயிர் அந்த அந்த இடத்திலே என்றும் கிலேயாக இருப்பதில்லை. புண்ணியப் பயன் உள்ள மட்டும் சொர்க்கவாழ்வு இருக்கும்; பின்பு நிலவுலகில் உயிர் வந்து பிறக்கும். நரக வாழ்வும் அத்தகையதுதான்; பாவப் பயன் கழிந்தால் மீட்டும் நிலவுலக வாழ்வு வரும். அவ்வாழ்வில் மீட்டும் செய்யும் கல்வினை தீவினைகளுக்கு ஏற்றபடி அதன் பின் உண்டாகும் வாழ்க்கை அமையும். இந்த மூன்று இடங்களில் எங்கும் உயிர் கிலேயாகத் தங்காது. - -

இந்த மூன்று கிலேயும் கடந்த வீட்டுலகில் உயிர் புக்கால் மீட்டும் அது பிறவியை அடையாது; அங்கே கிலேயாகத் தங்கிவிடும்; அதன் பயணம் முற்றுப்

கற்பக-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/146&oldid=553363" இலிருந்து மீள்விக்கப்பட்டது