பக்கம்:கற்பக மலர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is & கற்பக மலர்

பெறும் மறுபடியும் இங்கே வந்து பிறவாத கிலே அது. இதை,

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி (356)

என்ற குறள் சொல்கிறது. இம்மக்கட்பிறப்பில் கற்க வேண் டியவற்றைக் கற்று மெய்ப்பொருளே உணர்ந்தவர்கள், மீண்டும் இவ்வுலகத்துக்கு வாராத நெறியாகிய வீட்டை அடைவர் என்பது பொருள். ... "

"மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே"

(சிவபுராணம்)

என்பது திருவாசகம்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு (340)

என்னும் குறளில் வீட்டையே புக்கில் என்கிருர். துச்சில் என்பது சில காலம் வாழ்ந்து புறப்படும் இல்லம்; குடியிருக் கும் வீடு. புக்கில் என்பது புகுந்து எப்போதும் வாழும் சொந்த வீடு. இந்த உயிர் ஓர் உடம்பை விட்டு மற்ருேர் உடம்பிற் புகுந்து மாறி மாறிப் பிறந்து, அடிக்கடி வீடு மாற்றும் குடித்தனக்காரனேப் போல இருக்கிறதே; @5) குச் சொந்தமாக எப்போதும் பேராமல் வாழ்வதற்குரிய வீடு ஒன்றும் அமையவில்லே போலும்!’ என்று இரங்குகிருர் திருவள்ளுவர். ‘புக்கில் என்பது முத்தித்தானம் என்று விளக்குவார் மணக்குடவர். முத்தி நிலையைப் பேரா இயற்கை (370) என்று ஒரு குறள் கூறு 10. - to . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/147&oldid=553364" இலிருந்து மீள்விக்கப்பட்டது