பக்கம்:கற்பக மலர்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த நிலை 1 39.

உறுதிப் பொருள்களில் ஒன்ருக வரும் இன்பம் என்பது ஒருவனும் ஒருத்தியும் தம்முள் ஒன்றுபட்டுப் பெறும் இன்பம். உள்ளமும், உடம்பும் நுகரும் இன்பம் அது. அதனைச் சிற்றின்பம் என்று சொல்வதுண்டு. பேரின்பம் ஒன்று இருத்தலின் அதனே அவ்வாறு கூறுவர். வீட்டின்பந்தான் பேரின்பம். அது இணையற்ற கிரதிசய இன்பம். -

இருள் நீங்கி இன்பம் பயக்கும், மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. (352)

- இந்தக் குறள், அறியாமையினின்றும் நீங்கிக் குற்ற மற்ற மெய்ஞ்ஞானம் பெற்றவர்களுக்கு, அந்த ஞானம் பிறப்பினை நீங்கச் செய்து பேரின்பமாகிய வீட்டை அளிக் கும் என்னும் பொருளுடையது. ம்ெப் உணர்தல் என்னும் அதிகாரத்தில் வரும் குறள் இது. மெய்யுணர் வாகிய ஞானத்தைப் பெற்றவர்கள் வீட்டின்பம் பெறுவார் கள் என்னும் கருத்தைச் சொல்கிறது. இது. இங்கே வீட்டை இன்பம் என்றே சொல்கிருர், வீடாவது நிரதிசய இன்பம் என்பது இதல்ை பெறப்பட்டதாகப் பரிமேலழகர் குறிக்கிருர்.

எல்லா கிலேகளிலும் மேலானது வீடு என்பதும், அது பெற்ருர் சொர்க்கம் நகரம் நிலவுலகம் என்னும் மூன்று நிலைகளையும் அடையார் என்பதும், அங்கே நிலையாக இருப்பார் என்பதும், தேவர்களுக்கும் எட்டாத சிறப்புடை யது அது என்பதும், பேரின்பமயமானது என்பதும் முன்னே பார்த்த திருக்குறட்பாக்களால் தெரியவரு கின்றன. -

உலக வாழ்வு பெற்ற உயிர் முடிந்த முடியாக விட் டின்பம் பெறுவதே லட்சியும் என்பது எல்லாச் சமயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/148&oldid=553365" இலிருந்து மீள்விக்கப்பட்டது