பக்கம்:கற்பக மலர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பக மலர் 3

பாணி; நாளுக்கு ஒரு மோஸ்தர். நாம் உண்ணும் உணவில் எத்தனையோ பொருள்கள் புதியனவாகப் புகுந்திருக்கின்றன. பிஸ்கோத்து பழங்காலத்தில் இல்லை. ஒரு காலத்தில் மிளகாயே இந்த நாட்டில் இல்லை என்ருல் வியப்பாக இருக்கிறதல்லவா?

நம்முடைய உடம்பிலேகூட மாற்றங்கள் நிகழ்கின்றன. தலைக் கோலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக் கின்றன. நம்முடைய பேச்சில், எண்ணங்களில் வாழ்க்கை மாற்றத்துக்கு ஏற்ற புதிய கருத்துக்களும் புதிய கற்பனைகளும் வந்துவிட்டன. ஆதலின் யாணர் நாள் (புதிய காலம்) இது என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் பழமையை யாராவது சுட்டிக் காட்டினல்,

'அதெல்லாம் பழைய காலம், சுத்தக் கர்நாடகம், பத்தாம் பசலி!” என்று எள்ளி நகையாடுவதைப் பார்க்கிருேம்.

இப்படி, காலத்துக்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில அடிப்படையான செயல்களும் கருத்துக்களும் அப்படியே நிற்கின்றன. உடையில் மாற்றம் வந்தாலும் உடை உடுத்துவதாகிய செயல் அப்படியே இருக்கிறது. உணவில் புதிய சேர்க்கைகள் வந்தாலும் வாயால் உணவை உண்பது என்ற அடிப்படையை மாற்றவில்லை. பெண்களே குழந்தைகளைப் பெறுவது என்பதை மாற்ற முடியவில்லை. . -

இவற்றைப் போலவே மனித சாதியின் வாழ்வில் அடிப்படையான கருத்துக்கள் இருக்கின்றன. மகளிர் கற்புகெறியைப்பற்றி ஒவ்வொரு காட்டினருக்கும் ஒவ்வொரு முறை இருக்கலாம். மணம் புரிவதில் வேறுபாடு

கற்பக-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/18&oldid=553228" இலிருந்து மீள்விக்கப்பட்டது