பக்கம்:கற்பக மலர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iÈ கற்பக மலர்

தருவது; திருக்குறள் கவிதை நூலாக இருப்பதல்ை அதில் பயனும் இனிமையும் ஒருங்கே இருக்கின்றன.

பழைய இலக்கண உரையாசிரியர்கள், பாலும் ஆயிற்று; மருந்தும் ஆயிற்று’ என்று ஒரு வாக்கியத்தை எடுத்துக் காட்டுவார்கள். சுவை தரும் பொருள்; அதோடு பயன் தரும் பொருள்' என்பது அதன் கருத்து. பாலுக்குப் பதில் தேனே வைத்து, தேனும் ஆயிற்று; மருந்தும் ஆயிற்று என்று நாம் புதிய வாக்கியம் ஒன்றைச் சொல்லிப் பார்க்கலாம். தேனும் உடம்புக்கு நலம் தருவதுதானே? தேன் இனிமை யானது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தேன் என்றவுடன் அதன் இன்சுவைதான் நம் நினைவுக்கு வரும். படிக்கப் படிக்க இனிமை உடைய கவிதை யாகவும், பொருள் உணர உணர நலம் பயக்கும் நீதி நூலாகவும் விளங்குவது திருக்குறள். அதற்கு இனிமையும் பயனும் உடைய தேனை உவமை சொல்லலாம் அல்லவா?

திருக்குறளேக் கற்பக மலராகச் சொன்ன புலவர், அது அம் மலரைப்போல், தேன்பிலிற்றும் நீர்மையது' என்று. சொல்கிருர். அது சுவையான கவிதை வடிவில் அமைந்தது; சொற்சுவை பொருட் சுவைகளைப் பெற்றது; மனித சாதியை உயர்த்தும் கருத்துக்களைச் சொல்வது.

இந்த இருவகைத் தன்மையும் திருக்குறளில் இருப்பதைத் திருவள்ளுவ மாலேயில் மற்ருெரு பாட்டுச் சொல்கிறது.

ஒதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீதற்ருேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/21&oldid=553231" இலிருந்து மீள்விக்கப்பட்டது