பக்கம்:கற்பக மலர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பக மலர் f 3.

உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

உண்மையைச் சொல்வது மட்டும் போதாது; அதைச் சுவைபடச் சொல்ல வேண்டும். அதுதான் இலக்கியம். கலேகள் இன்பந்தரும் இயல்புடையனவாக இருக்க வேண்டும். அவற்றின் முதல் இலக்கணம் அது. எல்லாக் கலேகளிலும் உயர்ந்தது கவிதைக் கலை. ஆதலின் இன்பத் தைத் தருவதில் அது மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். திருக்குறள் கவிதையாகவும் இருந்து இன்பத்தைத் தருகின்றது. மலரில் தேன் இருப்பதுபோல அந்த நூலில் கவிதைச் சுவையும் இருக்கிறது.

இதுவரைக்கும் கூறியவற்ருல் திருக்குறள் என்றும் மங்காத திட்பம் உடையது, கால வெள்ளத்தில் சாயாமல் கின்று மக்கட் சாதிக்கு நலம் தருவது, அவ்வக் காலத்துக்கு ஏற்ற வகையில் பொருள் விரிவு பெற்று கிற்பது, கவிச் சுவையையுடையது என்பவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இத்தனே இயல்புகளேயும், அது கற்பகத்தின் மண நிறை நறை மலர் போன்றது என்ற உவமையால் சொல்லிவிட்டார் புலவர்.

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் - நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

(புலராது - வாடாமல். யாணர் - புது வரவு. நீர்மைய

தாய் - இயல்பையுடையதாய். போன்ம் போலும். மன்

நில பெற்ற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/22&oldid=553232" இலிருந்து மீள்விக்கப்பட்டது