பக்கம்:கற்பக மலர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - கற்பக மலர்

திருக்குறளின் சிறப்பைச் சொல்லும் தனி நூல் ஒன்று உண்டு. திருவள்ளுவ மாலே என்று அதற்குப் பெயர். வேறு எந்த நூலுக்கும் சிறப்புப் பாயிரமே தனி நூலாக இல்லை. ஐம்பத்து மூன்று பாடல்களால் அமைந்த அந்த நூலில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவரால் பாடப் பெற்றதாகப் பெயரைச் சேர்த்திருக்கிருர்கள். அசரீரி, நாமகள், இறையனர் ஆகிய தெய்வங்களும் பாராட்டிப் பாடியனவாக முன்று பாடல்கள் தொடக்கத்தில் இருக் கின்றன. என்றும் புலராது” என்ற இப் பாடலைப் பாடியவர் பெயர் இறையனுt என்று காணப்படுகிறது. மதுரையில் இருக்கும் ஆலவாய் இறையனராகிய சோமசுந்தரக் கடவுளே இதைப் பாடியதாகப் பழங் காலத்தில் சொல்லி வந்தார்கள். இறையனர் அகப் பொருள் என்ற இலக்கண நூலின் ஆசிரியரும், 'கொங்கு தேர் வாழ்க்கை’’ என்ற குறுந்தொகைப் பாடலின் ஆசிரி யரும் அந்த இறையனரே.

ஆலவாய் இறையனராகிய தெய்வமே இந்தப் பாட்டைப் பாடினரா, இல்லையா என்ற ஆராய்ச்சியில் இப்போது புக வேண்டாம். பாட்டு என்னவோ மிகவும் அருமையாக இருக்கிறது; இலக்கியப் பண்புகளேக் கவிதைச் சுவையோடு சொல்வதாக அமைந்திருக்கிறது. அதைப் பாடியவர் இன்று தெய்வமாகிவிட்டார் என்று சொல்வதில் நமக்கு ஒரு தடையும் இல்லே. உண்மையைச் சொல்லும் வாக்குத் தெய்வ வாக்கு என்று உபசாரமாகக் கொள்வது வழக்கம். -

தேவர்களுக்குக் கிடைத்த கற்பக மலரை நாம் அறியோம்; அது கற்பனைக் கற்பகத்தில் மலர்ந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/23&oldid=553233" இலிருந்து மீள்விக்கப்பட்டது