பக்கம்:கற்பக மலர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கற்பக மலர்

ஆனல் கடவுள் வாழ்த்துப் பாடல்களின் பொருளே நோக்கில்ை இந்தக் கருத்தைப் பரிமேலழகர் சற்று நுணுகிப் பார்த்து எழுத வில்லையென்று தோற்று கிறது. மக்கள் வாழ்க்கையில் சிறந்து கிற்க வழி வகுக்க வந்த திருவள்ளுவர், பிற நீதிகளே அதிகாரங்க ளாக வகுத்து விரிவாகச் சொல்லப்போகிருர். எல்லா வற்றிற்கும் மேலான ஒன்றை எடுத்தவுடன் வற்புறுத்து கிருர். மக்கள் யாவரும் கடவுள் உணர்ச்சியோடு வாழவேண்டுமென்றும், அவனை வழிபட வேண்டு மென்றும் புலப்படுத்துவதற்காகவே கடவுள் வாழ்த்தைப் பாடினர்.

‘கடவுள் வழிபாடு என்ற பெயரை அமைத் திருக்கலாமே; கடவுள் வாழ்த்து என்று இருப்பதால் கவிஞன் கடவுளே வாழ்த்தியதாகக் கொள்வதுதான் தக்கது’ என்று கூறலாம். இந்த அதிகாரத்தில், கடவுளே மக்கள் மன மொழி மெய்களாகிய மூன்று கரணங்களாலும் வழிபட வேண்டும் என்று வள்ளுவர் புலப்படுத்துகிரு.ர்.

தனக்குவமை இல்லாதான்

தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது (7) என்பது, மனத்தால் தியானம் செய்வதைக் குறிப்பது. மனக் கவலை மாற்றுவதற்கு மனத்தால் சிந்திக்க வேண்டும். - - -.

- இருள்சேர் ຈົorq; சேரா, இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5) என்பது இறைவன் புகழை வாயினுற் சொல்ல வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/27&oldid=553237" இலிருந்து மீள்விக்கப்பட்டது