பக்கம்:கற்பக மலர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இறைவன் திருவடி 19. கோள் இல் பொறியிற் - குணம்இலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை (9)

என்பது தலேயால் வணங்க வேண்டும் என்று, மெய்யால் புரியும் வழிபாட்டைச் சுட்டுகிறது.

இப்படி மூன்று கரணங்களாலும் மக்கள் இறை வனே வழிபட வேண்டுமென்று கூறினர் ஆசிரியர். இறைவனே நினைத்தல், இறைவனே வாழ்த்துதல், இறைவனேப் பணிதல் என்ற மூன்றும் முறையே மனம், மொழி, மெய் என்னும் மூன்ருலும் நிகழ்வன. இவற்றில் மனிதன் தனக்கே உரியதாகிய வாக்கில்ை புரியும் வழிபாடு, வாழ்த்து. சிறப்பான ஒன்றைச் சொன்னுல் அதனுேடு தொடர்புடையவற்றையும் சேர்த்துக் கொள்வது வழக்கு. அதை உபலட்சணம் என்று சொல்வார்கள். ஆதலின் கடவுள் வாழ்த்து என்பதை, கடவுளே நினைத்தல், வாழ்த்துதல், வணங்குதல் என்னும் மூன்றுக்கும் பொதுவாகவே கொள்ள வேண்டும்.

எல்லாருக்கும் பொதுவான நூலே இயற்ற வந்த வள்ளுவர் இறைவனைச் சிவன், திருமால், முருகன், அருகன் என்று பெயர் சுட்டாமல் பொதுவான முறையிலேயே குறித்திருக்கிருர். ஆதிபகவன், வாலறி வன், மலர்மிசை ஏகினன், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்றே கடவுளே அவர் கூறு கிருர். இப்பெயர்கள் எல்லாத் தெய்வங்களுக்கும். பொருந்துவன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/28&oldid=553238" இலிருந்து மீள்விக்கப்பட்டது