பக்கம்:கற்பக மலர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கற்பக மலர்

அது சுற்றிச் சுற்றிச் சுழன்றுகொண்டே வருகிறது. கடைசியில் ஒரிடத்தில் நின்று சுழலுகிறது. அப் போது, அது துளங்குகிறது என்று சொல்வான் பையன். பக்தர்களுடைய கண்ணும் மனமும் இறைவனுடைய திருவுருவத்தில் சுற்றிச் சுற்றி வந்து ஈடுபடும். பிறகு திருடியில் நின்று இன்புறும். இறைவன் திருவடி மலரில் வண்டாக நின்று இன்புறுவது அன்பர்களின் உள்ளத்துக்கு இயல்பு.

இறைவனுக்கும் நமக்கும் தொடர்பு எப்படி உண்டாகும்? ஒரு கூட்ஸ் வண்டியில் பாரம் நிறைந்த பெட்டி ஒன்றை இணைக்க வேண்டுமானல், வண்டி யின் பக்கத்திலேயோ எஞ்சினுக்கு அருகிலேயோ கொண்டு சென்று அதைச் சார்த்தி இணைப்பதில்லை. வண்டியின் கடைசிப் பெட்டியில் உள்ள கொக்கியையும், கோக்கப் பெறும் பெட்டியிலுள்ள கொக்கியையும் இணைப்பார்கள். அதுவரையில் தனியே நின்றிருந்த பெட்டி அதன் பிறகு வண்டியோடு சேர்ந்து இயங்கத் தொடங்கும். அவ்வாறே இறைவனிடம் ஒரு கொக்கி யும் நம்மிடம் ஒரு கொக்கியும் உள்ளன. அவற்றை இணைக்க வேண்டும். நம்மிடம் உள்ளது தலே. அது உடம்பிலுள்ள உறுப்புக்களிற் சிறந்தது. அதை வட மொழியில் உத்தமாங்கம் என்பார்கள். ஐந்து இந்திரி யங்களும் ஒருங்கே இருக்கும் இடம் அது. இறைவனுடைய உத்தம அங்கம் திருவடி.

“நின்னிற் சிறந்தகின் தாளினையவை'

என்பது பரிபாடல். நம்முடைய உத்தமாங்கமாகிய தலையை இறைவனுடைய உத்தமாங்கமாகிய திருவடி யோடு இணைத்துவிட்டால் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பு உண்டாகும். இறைவனுடைய பக்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/31&oldid=553241" இலிருந்து மீள்விக்கப்பட்டது